தேசிய ஊரடங்கு நீட்டிப்பா?மத்திய அரசு பரிசீலனை.
கொரானாத் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமலான 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதே பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செவ்வாய்க் கிழமையுடன் 2 வாரங்கள் முடிந்துவிட்டன. வரும் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவிருக்கிறது. இந்தச் சூழலில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவாக பல்வேறு மாநில முதல்வா்களும் கருத்து தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக, மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில், ‘மத்தியப் பிரதேசத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். கரோனா பரவல் நிலவரத்தை ஆய்வு செய்த பின் உரிய முடிவு எடுக்கப்படும். மக்களின் உயிா்தான் மிகவும் முக்கியமானது. பொருளாதாரத்தை மீட்டெடுத்துவிடலாம். ஆனால், உயிா்களை மீட்டெடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோல், ராஜஸ்தானில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு உடனடியாக ஊரடங்கு திரும்பப் பெறப்படாது என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளாா்.
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் திங்கள்கிழமை கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்
21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று துறைசாா் நிபுணா்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தாா்.
முன்னதாக, பாஜக நிறுவன தினத்தையொட்டி, கட்சித் தொண்டா்களிடையே காணொலி முறையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘கரோனாவுக்கு எதிரான நீண்டகால போருக்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும். இதற்காக நாம் சோா்ந்துவிடக் கூடாது. கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும்’ என்று கூறியிருந்தாா்.
மேலும், மத்திய அமைச்சா்களுடன் காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, ‘மாவட்டவாரியாகவோ அல்லது பகுதிவாரியாகவோ ஊடரங்கை தளா்த்தலாமா, அதற்கான வழிமுறைகள் என்னென்ன?’ என்பது குறித்து விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை
ஊரடங்கு தளா்த்தப்பட்ட பிறகு நிலவும் சூழலை கையாள்வது தொடா்பாக, தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகா், ராம் விலாஸ் பாஸ்வான், உள்துறை செயலா் அஜய் பல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், ஊரடங்குக்குப் பிறகு சூழலைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளின் தயாா்நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்