முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் போதை மருந்துக்கு எதிரான நூல் காணொலி மாநாட்டில் வெளியீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், போதையின் காரணமாக ஏற்படும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளை கொண்ட புத்தகம் ஒன்றை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர் செய்வதற்கான சிகிச்சை விதிமுறைகள் பற்றிய மின்நூல் ஒன்றை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் இன்று காணொளி மாநாட்டின் மூலம் வெளியிட்டார். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தை நிறுத்தச் செய்வது, போதை மருந்துக்கு அடிமையாகும் நடத்தையை சீராக்குவது போன்றவற்றுக்கான சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார். போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு.அஸ்வினி குமார், “உலகம் நவீன வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இதுபோன்ற பிரச்சினைகள் மிக அதிகமாக உள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் போக்கின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. இதை கோவிட் பொதுமுடக்கக் காலத்தின் போது நாம் பார்த்தோம்” என்று கூறினார். சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வரும் போதை மருந்துப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான திட்டம் (Drug Deaddiction Program - DDAP) மற்றும் இது போன்ற பல்வேறு முயற்சிகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வரும் இதர பங்குதாரர்களின் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். போதை மருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலைப் போக்குவரத்து விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மன நோய் போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து டாக்டர் ஹர்ஷ்வர்தன் உரையாற்றினார். சூதாடுதல், பொருள்கள் வாங்குதல், கணினி மூலமாக தகாத தொடர்பு கொள்ளுதல், கணினி மூலமாக உடலுறவு சம்பந்தப்பட்ட கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பார்த்தல், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கும் உறவுகளுடன் அளவுக்கு அதிகமான தொடர்பு கொள்ளுதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு போதை தரும் பழக்கங்களிலிருந்தும் விடுபட சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறித்து டாக்டர் ஹர்ஷ்வர்தன் திருப்தி தெரிவித்தார். கோவிட் காலத்தின்போது போதைப் பழக்கம் தொடர்பான சவால்களைச் சமாளிப்பது மிகவும் முக்கியம் என்று கூறிய டாக்டர் ஹர்ஷவர்தன் உலக போதை மருந்து தொடர்பான அறிக்கை 2020 “உலகில் முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, போதை மருந்து பயன்படுத்துபவர்கள் மலிவு விலையில் கிடைக்கும் போதைப் பொருள்களை நாடுவது; ஊசி மூலம் போதை மருந்து செலுத்தி கொள்வது; பொருளாதாரச் சரிவின் காரணமாக ஏழை எளிய மக்கள் போதை மருந்துக்கு அடிமையாவது; அதனால் ஏற்படும் பாதிப்புகளால் அல்லல்படுவது போன்றவை ஏற்படும்” என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார். புகை பிடிப்பதால் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மேலும் மோசமடைய, இந்தப் பழக்கம் காரணமாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல் குடிப்பழக்கமும் கோவிட் நோயால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது உட்பட பல தீய பக்கவிளைவுகளை இப்பழக்கம் ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் கூறினார். பிற போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாகவும், இதே போன்ற தீய விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...