முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வர்த்தகம் எளிமையாக ஜி எஸ் டி வரி மேலும் எளிமையானதாக்க முயற்சி நிதியமைச்சர் உறுதி

வர்த்தகம் செய்வதை மேலும் எளிமையாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: மத்திய நிதியமைச்சர். ஜிஎஸ்டி நாள் 2020 அல்லது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றாவது ஆண்டு தினம் சிபிஐசி மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் பல அலுவலகங்களில் இன்று அனுசரிக்கப்பட்டது. சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கும், ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை என்ற குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லவும் இருந்த தடைகளை உடைப்பதற்கு ஜிஎஸ்டி கருவியாக இருந்தது. இந்த நாளைக் குறிக்கும் வகையிலான அனைத்து பங்குதாரர்களுடனான நிகழ்ச்சிகளும், கோவிட்-19 நிலைமைக்கேற்ப டிஜிட்டல் தளங்களில் மெய்நிகர் வழியாகவே நடைபெற்றன. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி நாள் 2020 தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், பங்குதாரர்களின் கருத்துக்களுக்கேற்ப ஜிஎஸ்டி வரி நிர்வாகம் எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினார். எனினும் வரி செலுத்துவதை மேலும் எளிமையாக்க, மேலும் பல முயற்சிகள் தேவைப்படுகின்றன. நிதியமைச்சரின் செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: பிரதமரின் “சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம்” என்ற அறைகூவலுக்கு அதிக கவனம் செலுத்துவது வர்த்தகம் செய்வதை மேலும் எளிமையாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் வரி செலுத்துபவர்களுக்கு வரி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது வர்த்தக சமுதாயத்தினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கு முன்னதாகவே தீர்வு காண்பது கோவிட் பெருந்தொற்று நிலவும் இந்த மிகச் சோதனையான காலங்களில், மிகவும் பாராட்டத்தக்க பணிபுரிந்தமைக்காக சிபிஐசி அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தங்கள் கடமையை மட்டும் ஆற்றாமல்; வரி செலுத்துவோர் நலனுக்காக அவர்கள் கரம்பிடித்து வழி நடத்தினார்கள். இந்த கோவிட்-19 காலத்தில் வரி செலுத்துபவர்களிடையே பணப்புழக்கம் இருக்கும் வகையில், அவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகையை, சாதனை அளவில் திருப்பிச் செலுத்தியமைக்காக அவர் பாராட்டு தெரிவித்தார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார இணை அமைச்சர் திரு.அனுராக் தாகூர் விடுத்துள்ள செய்தியில், வரி தாக்கல் செய்யும் வழிமுறைகள் மேலும் எளிமையாக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச வரியை திரும்பச் செலுத்துவது இன்புட் டாக்ஸ் கடன்  (Input Tax Credit)  அனுமதியை விரைவுபடுத்துவது ஆகியவையும் அவசியம் என்று அவர் கூறினார். பொதுமுடக்கக் காலத்தில் மிகக் கடினமாகப் பணியாற்றிய சிபிஐசி அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ஜிஎஸ்டி ரீஃபண்ட் பணிகளைச் செய்வதற்கு, தகவல் தொழில்நுட்ப வசதிகளை திறம்படக் கையாண்டு, இதனால், வரி செலுத்துவோரிடையே பணப்புழக்கம் நிலவச். செய்ததற்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 காலத்தில் இன்னலில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிபிஐசி கள அலுவலர்களும் பாராட்டப்பட்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்கள் பாதுக

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை