வி.கே.சசிக்கலா நடராஜன் உடல்நிலை முன்னேற்றம்
குறித்து மருத்துவமனை இன்று இரவு 8 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானா அறிகுறிகள் குறைந்துள்ளதாகவும், அவரது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 77 (நார்மல்), ரத்த அழுத்தம் 149/64 (நார்மல்), சுவாச விகிதம் நிமிடத்துக்கு 22 (நார்மல்) ஆக இருப்பதாகவும் உடலில் ஆக்சிஜன் அளவு 97% ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனைத் தகவல் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்கு வி.கே சசிகலா நடராஜன் ஒத்துழைப்புத் தருவதாகவும், ஐசியூ வார்டில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்