வங்கிகளுக்கு மார்ச் 27 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலிப் பண்டிகை, 31 ஆம் தேதி
வருடக்கணக்கு முடிக்க இறுதி நாள், ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டில் முதல் நாள், ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே விடுமுறை என செய்தி வந்துள்ளது. இதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்படவே அப்போது வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்தி வந்துள்ளது தவறானது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.“மார்ச் மாதம் 27, 28 ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஆனால் மார்ச் 29 ஹோலி பண்டிகை, தமிழகத்திற்கு விடுமுறை இல்லை வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை, மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டு முடிவு அன்று விடுமுறை இல்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்