சீரம் இன்ஸ்டிட்யூட் கோவிஷீல்டு விலையை அறிவித்தது. மாநிலங்களுக்கு ரூ 400. தனியாருக்கு ரூ 600.
ஒப்பீடுக்காக, அமெரிக்க மருந்து @
1500. (ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன். என்றாலும் இவற்றின் ஏற்றுமதிக்கு பைடன் தடை விதித்துள்ளார்).
ரஷ்ய மருந்து @ 750. (ரஷ்ய ஸ்புட்னிக்கை டாக்டர் ரெட்டீஸ் லாபரட்டரி ஹைதராபாதில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது. ஹைதராபாத் விலை குறைவாக இருக்கும்).
சீன மருந்து @ 750. எஃபிகசி ரொம்ப மோசம். மத்திய அரசு கோவிஷீல்டை ரூ 250 வாங்குகிறது .
மத்திய அரசு திட்டப்படி, 45 வயதுக்கு மேற்பட்டோர் + சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசம் தொடரும். அவர்களே தனியார் மருத்துவமனை சென்றால் 250.
18 முதல் 45 வயது வரை மக்களுக்கு மத்திய அரசு இலவசம் (ஜூனில் அறிவிக்கலாம் ) இப்போது அறிவிக்காத வேளையில், மாநில அரசுகளும் தனியாரும் நேரடியாக தடுப்பு மருந்தை வாங்கி செலுத்தலாம். அதற்கான விலையை சீரம் இப்போது அறிவித்துள்ளது.
உத்திரப் பிரதேசம், பிஹார், அஸ்ஸாம் மாநிலத்தில் இலவசம் என அறிவித்துவிட்டன.
கருத்துகள்