12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தும் பொது நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் துவக்கம்,
இந்தியா முழுவதிலுமுள்ள 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தும் பொது நுழைவுத்தேர்வு, சென்ட்ரல் யுனிவர்சிட்டீஸ் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்- சி.யு.சி.இ.டி.,
இந்திய அரசின் சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., தேர்வை நடத்துகிறது.
வேதியியல், உயிர் அறிவியல், கணிதம், இயற்பியல், நூலக அறிவியல், வணிகவியல், உளவியல், கணினி அறிவியல், புவியியல், தோட்டக்கலை, நுண் உயிரியல், புள்ளியியல், வரலாறு, தொடர்பியல், வணிக நிர்வாகம், இசை, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பொருளாதாரம், மேலாண்மை, சட்டம், யோகா, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளிலில் உள்ள படிப்புகளுக்கு.
விண்ணப்பிக்கும் படிப்பு மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். இதில்
அசாம் பல்கலைக்கழகம்- சிலிச்சர், ஆந்திர பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், சவுத் பிகார் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் திருவாரூரிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். ஆகும்
மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை, ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதுவரை காகித அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வை இந்தாண்டு என்.டி.ஏ., ஏற்று நடத்துவதால், முதல்முறையாக கணிப்பொறி அடிப்படையில் நடைபெறும். ’மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்; காலை 10 மணிமுதல் 12 மணிவரை மற்றும் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை என இரண்டு ’ஷிப்ட்’களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு நாட்கள்: செப்டம்பர் மாதம் 15, 16, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில்
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி
விபரங்களுக்கு: https://cucet.nta.nic.in/ இணையவழி காண்க
கருத்துகள்