கோலிட் -19 பாதிப்பு இந்தியாவில் 67 கோடியைக் கடந்த தடுப்பூசி, குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.45 சதமானது
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 67 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 67 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,84,333 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 70,34,846 முகாம்களில் 67,09,59,968 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 34,791 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது.
நம்நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.45 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து 68 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.22 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,66,334 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,65,35,068 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 70 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.66 சதவீதம் என்ற அளவிலும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.72 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 37 நாட்களாக அன்றாடத் தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 88 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 65 கோடி தடுப்பூசிகள் விநியோகம்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு செப்டம்பர் 3-ந் தேதி வரை, 65 கோடிக்கும் அதிகமான (65,00,99,080) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.
இந்திய அரசு மற்றும் நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் மேலும், 1.20 கோடிக்கும் அதிகமான அளவு (1,20,95,700) தடுப்பூசிகள் உள்ளன.
சுமார் 4.36 கோடி (4,36,81,760) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன..
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 67.09 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.22%.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆகும்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.45%.
கடந்த 24 மணி நேரத்தில் 34,791 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,20,63,616 பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.66%%) 70 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (2.72%)-மாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 52.65 கோடியாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்