பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பேத்தியும், மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது.
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் நிகழ்வுகள்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும்,, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், முனைவர் சௌமியா அன்புமணி மகளுமான சங்கமித்ரா சௌமியாவுக்கும் சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணியின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக தலைவர் மணி முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மணமகள் - மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கருத்துகள்