முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது மத்திய அரசு - மாநிலங்களவையில் தகவல்

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது மத்திய அரசு - மாநிலங்களவையில் தகவல்


மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார் இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

  கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது: 



1) மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது;  மின்சார வாகனங்களின் சார்ஜர் / சார்ஜிங் நிலையங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2) வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தனியாக சார்ஜிங் வசதிகள் அமைப்பதற்கு அனுமதித்து, சார்ஜிங் கட்டமைப்புக்கான தரநிலை, அறிவிப்பை மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டது.


3) மின்கலம் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பசுமை  நம்பர் பிளேட் கொடுக்கப்படும் எனவும் அவற்றுக்கு பெர்மிட் பெறுவதிலிருந்து   விலக்கு அளிக்கப்படும் எனவும் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

4) மின்சார வாகனங்களுக்கு  சாலை வரி விதிப்பிலுருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தி மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இது மின்சார வாகனங்களின் விலையை குறைக்க உதவும்.




5) தனியார் மற்றும் வர்த்தக கட்டிடங்களில் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் திருத்தியது.

கடந்த 2019ம் ஆண்டு, 1,61,314 வாகனங்களும், கடந்த 20220ம் ஆண்டில் 1,19,648 வாகனங்களும், மொத்தத்தில் 2,80,962 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாகனங்களுக்கான இணையளத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதையும், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ‘பேம்-இந்தியா’ திட்டத்தை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த 2015ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது இத்திட்டத்தின் 2-ம் கட்டம் 2019 முதல்  5 ஆண்டுகளுக்கு  ரூ.10,000 கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.. பேம் - இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மின்சார வாகனங்களின் வாங்கும் விலையை குறைப்பதற்காக `இது வழங்கப்பட்டது. மின்கலத்தின் திறனுக்கு ஏற்ப இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.15,000-மாக உயர்த்தப்பட்டது.வாகன உதிரிபாக முன்னணி நிறுவனங்களை அடையாளம் கண்டு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம்

இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இந்தியாவில் வாகனத் தயாரிப்பு மற்றும் வாகன உதிரிபாக தொழில்துறையினருக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.25,938 கோடி நிதிநிலை  அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்தத் திட்டம் சாம்பியன் ஓஇஎம் ஊக்கத்தொகைத் திட்டம் & உதிரிபாக சாம்பியன் ஊக்கத்தொகைத் திட்டம் இருபிரிவுகளைக் கொண்டது.  உதிரிபாக சாம்பியன் ஊக்கத்தொகைத் திட்டம், ‘விற்பனை மதிப்புடன் இணைந்த’ திட்டமாகும். 

இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணியர் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள், ராணுவ பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்ட பிற எந்த அதிநவீன வாகன தொழில்நுட்ப உதிரிபாக தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறலாம்.

பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள், செல் உதிரிபாகங்களுக்கும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை  வழங்கப்படும் என மத்திய கனரனத் தொழில்துறை இணை அமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜார் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...