உயர்கல்வி எளிதாகக் கிடைக்க திட்டங்கள்
ஏழ்மையான நிதிப் பின்னணியைக் கொண்ட தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவி செய்யவும், பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு உயர்கல்வி எளிதாக கிடைப்பதிலிருந்து எவரும் விடுபட்டு விடாமல் உறுதி செய்யவும், மத்திய கல்வித் துறை 3 திட்டங்களை அமல்படுத்துகிறது.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டம்
ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு கல்வி உதவித் திட்டம்
மத்திய அரசின் வட்டி மானிய திட்டம்
இவை தவிர, குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக மாணவர்களின் குடும்ப வருமானம் இருந்தால், ஐஐடி-க்களில் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. என்ஐடி-களில் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்