தேசிய அளவிலான அனைத்துத் தேர்வுகளும் பட்டியலிடப்பட்ட மொழிகளில் நடத்தப்படுகிறது
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த, சுதந்திரமான மற்றும் சுயமாக செயல்படக் கூடிய தேசிய தேர்வு முகமை (NTA) மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசிய தேர்வு முகமை கீழ் காணும் பட்டியலிடப்பட்ட மொழிகளில் முக்கியப் போட்டித் தேர்வுகளை நடத்தி உள்ளது.
நீட் (இளநிலை பட்ட வகுப்பு) தேர்வு 2021 இந்தி, அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது & பஞ்சாபி
ஜேஇஇ (பிரதான தேர்வு) 2021 அசாமீஸ், பெங்காலி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி & குஜராத்தி
அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு (AISSEE) 2021
6 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, இந்தி, அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு & உருது
இது தவிர மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வையும் மேற்குறிப்பிட்ட பட்டியலிடப்பட்ட மொழிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் (இளநிலை பட்ட வகுப்பு) தேர்வுக்கான வினாத்தாள்கள் பட்டியலிடப்பட்ட 12 மொழிகளிலும் முறையாக மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்