முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 31 ஆம் தேதி வரை தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை நீட்டித்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை ஜனவரி 31 ஆம் தேதிவரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்: முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு சில தளர்வுகள் அறிவிப்பு


தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை  ஜனவரி 31ம் தேதிவரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மத்திய சுகாதாரத்துறை செயலாளர், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது


தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, தேர்தல் ஆணயைர்கள் திரு ராஜீவ் குமார், திரு அனுப் சந்திரா பாண்டே , பொதுச் செயலாளர் மற்றும் துணை ஆணையர்கள் ஆகியோர் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தற்போதைய கொவிட் நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.  தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் விவாதித்தது.

அனைத்துத்  தரப்பு அதிகாரிகளின் கருத்துக்களைக்  கேட்டபின்பு, பிரச்சார காலத்துக்கான தேவைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 27ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதியும் இறுதி செய்யப்படும்.

தற்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு, கீழ்கண்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுத்தது:

(1) 2022 ஜனவரி 31ம் தேதி வரை பொதுக்கூட்டம், பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் பைக் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.

(2) முதல்கட்டத்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 27ம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்தவெளியில் அதிகபட்சம் 500 பேர் அல்லது மைதானத்தின் கொள்ளவில் 50 சதவீதம் அல்லது மாவட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கும் வரம்பு இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கூட்டங்களை நடத்திக்  கொள்ளலாம்.

(3) 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் படி கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.

(4) வீடு வீடாகச்  சென்று தேர்தல் பிரசாரம் செய்வோர்  எண்ணிக்கையையும் தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. 5 நபர்களுக்கு பதிலாக, தற்போது 10 பேர் வரை (பாதுகாவலர் நீங்கலாக)  வீடு வீடாகச்  சென்று பிரச்சாரம் செய்ய முடியும்.

5) உள்அரங்கு கூட்டங்களில் அதிகபட்சம் 300 பேர் அல்லது அரங்க இருக்கைகளில் 50 சதவீதம் பேர் பங்கேற்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே தளர்வு அளித்திருந்தது.

(6) பிரச்சாரத்துக்கு வீடியோ வேன்களை திறந்த வெளியில் அதிகபட்சம் 500 பார்வையளர்களுடன் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளன. 

(7) கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்  பின்பற்றப்படுவதை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 

(8) மேலே கூறப்பட்ட விஷயங்களை அமல்படுத்துவது அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பு.

(9) மீதமுள்ள அனைத்துக்  கட்டுபாடுகளும், கடந்த 8ம் தேதி வெளியிட்ப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளபடி தொடரும்.

இந்த அறிவுறுத்தல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை சம்பந்தப்பட்ட  மாநிலங்கள் / மாவட்ட அதிகாரிகள்  உறுதி செய்வர்.

இந்த அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பின்னர் மறுஆய்வு செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...