தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் எனும் நிலையில்,
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் துணை மேயர் பதவிக்கு வெற்றி பெற்று வந்த பிறகு மதன்மோகன் அல்லது நே.சிற்றரசு இருவரிடையே தான் போட்டி உள்ளதாகத் தகவல் வருகிறது.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச்செயலாளரான சிற்றரசு 110 ஆவது வார்டில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் இதுவரை 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 12 ஆம் கட்டமாகச் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் டில்லி பாபு உள்ளிட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்