முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய உரை

புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 2022 ல் நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர்  அமித் ஷா கலந்து கொண்டார்.  சிறந்த அறிவுஜீவி மற்றும் ஆன்மீக ஜாம்பவானான திரு அரவிந்தருக்கு அரவிந்தர் ஆசிரமத்தில் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.  இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஸ்ரீ அரவிந்தர் பெரும் பங்களிப்பைச் செய்தார், அவருடைய படைப்புகள் மற்றும் எண்ணங்கள் அனைவருக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

மேலும், நமக்கு வழிகாட்டும் ஒளியாக அவர் தொடர்ந்து விளங்குகிறார்.  இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரைக் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் வங்காளம் வரையிலும், ஒரே கலாச்சாரம் நம் அனைவரையும் பிணைக்கிறது.  இந்திய கலாச்சாரத்தின் பண்டைய உணர்வுக்கு புதிய ஆற்றல், வேகம் மற்றும் திசையை ஸ்ரீ அரவிந்தர் வழங்கினார். 

ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்களை இளைய தலைமுறையினரிடையே புகுத்தி, அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை அவர்களின் மனதில் ஏற்படுத்தாதவரை, ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது. நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் ஸ்ரீ அரவிந்தர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாடுபடுகிறோம். 

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்த முடிவின் பின்னணியில் மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன. நமது சுதந்திரப் போராட்டம் தொடர்பான சிந்தனைகளுக்கு இளைய தலைமுறையினரிடையே புத்துயிர் ஊட்ட வேண்டும், கடந்த 75 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதலிடத்தில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்லும் இலக்கை அடையும் காலமாகும் என்ற எண்ணத்தைப் பரப்ப வேண்டும் என்பதே அவையாகும்.

சுயாட்சி என்ற கருத்தை ஸ்ரீ அரவிந்தர் நாட்டிற்கு முன் வைத்தார், மேலும் உலகின் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி இந்தியாவுக்கு இருப்பதாக நம்பினார்.  சுயாட்சி என்பது அரசியல் அதிகாரத்தை மட்டும் குறிக்கவில்லை, சுயாட்சி என்பது இந்தியாவின் பூர்வீகக் கொள்கைகள், கலாச்சாரத்தின் கருத்துகள் மற்றும் அதன் சிறந்த மரபுகளை முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கிறது.  ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள் நாட்டிற்கான விலைமதிப்பற்ற பாரம்பரியம் ஆகும். எந்த வெற்றியையும் எதிர்பார்க்காமல் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான யோசனையை அவர் நமக்கு வழங்கினார். 

அரசியல் நடவடிக்கையின் ஒரு முக்கியமான கோட்பாட்டை ஸ்ரீ அரவிந்தர் முன்வைக்க முயன்றார், இது ஒரு வகையில் ஆன்மீக தேசியவாதம் என்றும் அழைக்கப்படலாம். தேசம் என்ற கருத்தை முதன்முறையாக அவர் முன்வைத்தார்.  ஸ்ரீ அரவிந்தரின் கல்விக் கொள்கையில் உள்ள கருத்துகள், திரு நரேந்திர மோடியின் புதிய கல்விக் கொள்கையை கவனமாகப் படித்தால் அதன் எல்லா இடங்களிலும் தெரியும். 



இந்தியா ஒருபோதும் சிறிய அளவில் நினைக்க முடியாது, இந்தியா ஒருபோதும் சிறிய அளவில் நினைக்கக்கூடாது, நாம் அடிமைகளாக இருந்த காலம் இருந்தது, ஆனால் நமது சிந்தனை மற்றும் பண்டைய கலாச்சாரம் ஒருபோதும் சிறிய அளவில் சிந்திக்க அனுமதிக்காது.  ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளின் வலிமையை ஊக்குவிப்பதில் தொடர்புடையவர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டில் உள்ள கல்வி முறை மீது கவனம் செலுத்த வேண்டும்.  இந்த மூன்று விஷயங்களும் ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்களுடன் இணைந்தால், ஸ்ரீ அரவிந்தர் கனவு கண்ட இந்தியாவை அடைவது கடினம் அல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...