முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜவுளிக் கடை உரிமையாளரிடம் 5 லட்சம் லஞ்சம் டி எஸ் பி கைது

5 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம் வழக்கை சாதகமாக முடித்துக் கொடுத்த வகையில் ரூபாய் .ஐந்து லட்சம் லஞ்சம் வாங்கிய கன்னியாகுமரி மாவட்டக் குற்றப்பிரிவுத் துணை கண்காணிப்பாளர்  தங்கவேலு (வயது 55), ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் ஜவுளிக்கடை நடத்தும் சிவகுரு குற்றாலம் (வயது 66). சொத்து வாங்ககித் தருவது போல இவரிடம் சிலர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள நிலத்தை விலை பேசி ரூபாய் .1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த 2 பேரும் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல், நிலத்தையும் பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாகத் தெரிகிறது.ரூபாய்.1.25 கோடியை மோசடி செய்ததுது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். துணை கண்காணிப்பாளர் தங்கவேலு சம்பந்தப்பட்ட மோசடி செய்த நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அந்த மோசடி நபர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் சிவகுரு குற்றாலத்துக்கு சொத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததைத் தொடர்ந்து சிவகுரு குற்றாலத்தை அழைத்த துணைக் கண்காணிப்பாளர் 'என்னால் தான் உங்களுக்கு சொத்து கிடைத்தது. இதற்காக ரூபாய் பத்து லட்சம் தர வேண்டும்,'' எனக் கேட்டார். கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார்.துணைக் கண்காணிப்பாளர் பீட்டர்பால் ஆலோசனையின் படி நேற்றிரவு குற்றப்பிரிவு  அலுவலகத்தில் வைத்து ரூபாய்.ஐந்து லட்சம் கொடுத்த போது அதை வாங்கிய துணை கண்காணிப்பாளர்., தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் சூலுார் ஆகும்



இதற்கிடையே இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, சிவகுருகுற்றாலத்திடம் பணம் வாங்கி மோசடி செய்த நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை எழுதிக்கொடுத்ததாக கூறப்படுவதையறிந்த துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், தான் இந்த புகாரை விசாரித்து பேசி முடித்ததால் தானே உங்களுக்கு சேரவேண்டிய நிலம் கிடைத்தது.

இதனால் எனக்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் ஒரு வாரமாகக் கேட்டு தொல்லைப்படுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து

அங்கிருந்த துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் ரூ.5 லட்சத்தை லஞ்சமாக ஜவுளி கடை உரிமையாளர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத் துறையினர் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அவரிடம் கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் ரூபாய்.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தங்கியிருந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுவை நாகர்கோவிலிலுள்ள மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றலானார் என்பது குறிப்பிடத்தக்கது.             


 மிரட்டியே லஞ்சம் வாங்க முயன்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தற்போது சிறையில் 

எவ்வளவோ முறை எச்சரிக்கைகள் விடப்பட்டும் விடாமல் அடம்பிடித்து லஞ்சம் வாங்கியே தீருவேன் என பணத்தாசையால் மதி இழந்து, அடாவடியாக லஞ்சம் வாங்க முற்பட்ட டிஎஸ்பி தங்கவேலு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையட்டும்.

இவர்  ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பொழுது அப்போதைய கைத்தறி துணிநூல் துறை மாவட்ட உதவி இயக்குனர் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பணம் கொடுத்தால் எத்தகைய பாதகத்தையும், தனது பணிக்காலத்தில் துணிந்து செய்தவர் இந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இவர் வாங்கி குவித்துள்ள பல கோடி ரூபாய்  சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது வழக்கில் சேர்க்க வேண்டும். பட்டியலிட வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...