முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை

ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை


“இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”

“நாடு தற்போது திறமை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது”

“தற்சார்பு இந்தியா நாம் பின்பற்ற வேண்டிய பாதை மட்டுமின்றி நமது உறுதிப்பாடு ஆகும்”

“EARTH- சுற்றுச்சூழல், வேளாண்மை, மறுசுழற்சி, தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரசேவை-க்காக பாடுபடுங்கள்”

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சியின் மையக்கருத்தான ‘அனைவரும் முயற்சிப்போம்’ என்ற உணர்வை சுட்டிக்காட்டியதுடன், இலக்குகளை அடைவதற்கான வளர்ச்சி குறித்த இந்தியாவின் உறுதிப்பாடுகளை உலகமே உற்று நோக்குவதாகக் கூறினார்.  சர்வதேச அமைதி, சர்வதேச வளம், சர்வதேச சவால்களுக்கான தீர்வு அல்லது  சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது என, எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த உலகமும் பெரும் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. “‘அமிர்தகாலம்’ தொடர்பான  இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இப்போதுதான் நாடு திரும்பியிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், பிரச்சனைக்குரிய துறையாக இருந்தாலும், மக்கள் கருத்தில் எத்தகைய வித்தியாசம் இருந்தாலும், புதிய இந்தியாவின் எழுச்சியால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக  பிரதமர் தெரிவித்தார். நாடு தற்போது, வாய்ப்புகள் மற்றும் சாத்தியம் என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக அனைவரும்  கருதுகின்றனர்.  தூய்மையான எண்ணம், தூய்மையான நோக்கம், மற்றும் சாதகமான கொள்கைகள் என்ற தமது முந்தைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நாடு தற்போது, திறமை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை  இயன்றவரை ஊக்குவிக்கிறது என்றார்.  நாட்டில் தற்போது தினந்தோறும் ஏராளமான ஸ்டார்டப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அரசு மின்னணு சந்தை (GeM) இணையதளம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும், அனைவரது முன்னிலையிலும் ஒரே தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். தற்போது தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களும், சிறுவணிகர்கள் மற்றும் சுயஉதவிக் குழுவினரும் தங்களது உற்பத்தி பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் GeM இணையதளத்தில் இணைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.வெளிப்படையான ‘முக அறிமுகமற்ற’ வரி மதிப்பீடு, ஒரே நாடு- ஒரே வரி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.


எதிர்காலத்திற்கான நமது பாதையும், இலக்கும் தெளிவாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார். “தற்சார்பு இந்தியா, நாம் பின்பற்ற வேண்டிய பாதை மட்டுமின்றி நமது உறுதிப்பாடு ஆகும். பல ஆண்டுகளாகவே இதற்குத் தேவையான அனைத்து சூழலையும் உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.”

 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் EARTH-ஐ பாதுகாக்க பணியாற்றுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். இதில் உள்ள

‘E’-என்பது சுற்றுச்சூழல் வளம் ஆகும் என்று அவர் விவரித்தார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த ஏரிகளை உருவாக்க எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

‘A’ – என்பது விவசாயத்தை மேலும் லாபகரமானதாக்கி, இயற்கை விவசாயத்தில் மேலும் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும்.

‘R’ – என்பதன் பொருள், மறுசுழற்சி மற்றும் சுற்றுப் பொருளாதாரம், மறுபயன்பாட்டிற்காக பாடுபடுவது, குறைத்தல் மற்றும் மறுசுழற்சியை வலியுறுத்துகிறது.

‘T’ – என்பது, தொழில்நுட்பத்தை இயன்றளவு அதிக மக்களிடம் கொண்டுசெல்லுதல் என்று பொருள்படும். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பெருமளவுக்கு கிடைக்கச்செய்யலாம் என்பது பற்றி பரிசீலிக்குமாறு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

‘H’ – என்பது சுகாதார சேவை என்று பொருள்படும் என குறிப்பிட்ட அவர், தற்போது சுகாதாரசேவை மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு பெருமளவு பாடுபட்டு வருவதாக கூறினார்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், அவர்களது அமைப்பு இதனை எந்தளவிற்கு ஊக்குவிக்கிறது என்பது பற்றி சிந்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...