நாளை தமிழகம் வருகை தரும் பிரதமர் மதுரை - தேனி இடையேயான அகல ரயில் பாதை மற்றும் ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
பிரதமர் ஹைதராபாத்தில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பகல் 2 மணியளவில் பங்கேற்கும் நிலையில் முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு-2022 விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அடுத்து மாலை 5:45 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் ரூ.29,000 கோடி மதிப்பிலான 5 திட்டங்களான 75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) அடுத்து சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதை மையும் .சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள், மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளைத் துவக்கி வைக்கவும்.
ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ. 14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. மேலும். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். மேலும் நெரலூரு-தர்மபுரி பிரிவில் (என்எச்-844) 94 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் (என்எச்-227) 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை முறையே ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. மேலும் .சென்னை எழும்பூர், இராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். திட்டம் ரூ. 1800 கோடி செலவில் முடிக்கப்படும். இந்த ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மூலம் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது
மேலும் ரூ.1400 கோடி மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள முன் மாதிரி போக்குவரத்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது தடையற்ற சரக்குப்போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், மற்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவும்.தமிழகத்தில் உள்ள 5 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். 1. சென்னை எழும்பூர் 2. ராமேஸ்வரம் 3. மதுரை 4. காட்பாடி 5. கன்னியாகுமரி புதுப்பிக்கப்பட உள்ள ரயில் நிலையங்கள்,
கருத்துகள்