தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில்
அண்ணாமலை தலைவராகி பத்து மாதங்களாகும் நிலையில். இதுவரை மாநிலப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்பதும் தற்போது நடந்த நியமனம் தொடர்பாக இரண்டு மாதமாக தீவிர ஆலோசனைகள் செய்யப்பட்டு வந்தன.
சரியாக 420 பதவிப் பொறுப்புகள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகள் படி ஒவ்வொரு மூன்று ஆண்டுங்களுக்கும் மாற்றப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த முறையும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. அதன்படி
புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 59 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 59 மாவட்ட தலைவர்கள் , 20 மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
விரைவில் மாநில துணைத் தலைவர்கள் பட்டியலிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்