முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைவருக்கும் தூய்மையான காற்று' என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

‘அனைவருக்கும் தூய்மையான காற்று' என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ்

“ ‘அனைவருக்கும் தூய்மையான காற்று’ என்பதை மக்கள் இயக்கமாக மாற்றும் தருணம், இது. நாடு முழுவதும்  நகரங்களில் காற்றின் தரம் மேன்மை அடைந்து வருகிறது. எனினும் நமது இலக்கை அடைவதற்கு இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது”, என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்தான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தொடங்கிய தேசிய தூய்மையான காற்று திட்டம் மற்றும் 15-வது நிதி ஆணையத்தின் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தென் மண்டல (தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவுகள் புதுச்சேரி டாமன் டையூ, தாதர் மற்றும் நாகர் ஹவேலி) நகரங்களுக்கான நிதி குறித்த உணர்திறன் மற்றும் சீராய்வு பயிலரங்கில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.


மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சிவ. வி. மெய்யநாதன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன், தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு,  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை  மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு நரேஷ் பால் கங்குவார் உள்ளிட்டோர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள்  பயிலரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளுக்கு உட்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு புதன்கிழமையும் புதைபடிவ எரிபொருள் அல்லாத வாகனங்கள் மூலம் அதிகாரிகள் அலுவலகத்திற்குச் செல்லும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்முயற்சியான இ- கம்யூட் திட்டத்தை அமைச்சர் வரவேற்றார்.

மற்றொரு புரட்சிகர நடவடிக்கையாக, பி.எஸ். 6 ரக தரநிலையில் இந்தியா முன்னேறி இருப்பதோடு, எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான அதன்  விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது, காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

“தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் 2014- 2018 வரையிலான காற்றின் தரநிலைகள் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 132 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு வகையான மற்றும் அளவுகளிலான நகரங்கள் கலந்துள்ள இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவின் தலா 4 நகரங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு நகரமுமாக மொத்தம் 13 நகரங்கள் இடம்பெற்றுள்ளன”, என்று அவர் குறிப்பிட்டார்.

முழுமையான அணுகுமுறையின் வாயிலாக சுமார் 100 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தி மக்களுக்குத் தூய்மையான காற்றை உறுதி செய்யும் பிரதமரின் உறுதிப்பாட்டை திரு புபேந்தர் யாதவ் நினைவுகூர்ந்தார்.

நிலையான வாழ்க்கை முறைகள், சரியான நடத்தை விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பின்பற்றி காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, சமுதாயத்தில் மாற்று சக்திகளாக திகழவேண்டும் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் நிலையான முயற்சிகளால் காற்று மாசுபாட்டை தீவிரமாக எதிர்கொள்ளும் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  வெற்றியூர்  ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.  சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய