முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார். விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட, திரு நாயுடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினத்தை அதிகரிக்க பரிந்துரைத்தார். இது நமது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.

 ‘விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும் எனக் கூறிய திரு நாயுடு,  ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் அழைப்பு விடுத்தார்.


ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், வேளாண் ஆராய்ச்சி மேலாண்மைக்கான தேசிய அகாடமி-யின் வேளாண் வணிக மேலாண்மை திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் இயக்குநர் பதக்கங்களையும் திரு நாயுடு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நாயுடு, விவசாயப் பல்கலைக்கழகங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான உற்பத்தி முறைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கடைசி விவசாயிக்கும் இந்த முன்னேற்றங்களை எடுத்துச் செல்வதை தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார். கிராமங்களுக்குச் சென்று உண்மையான விவசாயப் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ‘உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆராய்ச்சி பலன்களை கொண்டு வர பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பரிசோதனைக்கூடத்திலிருந்து நிலத்துக்கு ’ என்ற முழக்கத்தை நாம் உள்வாங்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

இதைப் பற்றி விரிவாகக் கூறிய திரு நாயுடு, விவசாயிகளுக்கான விரிவாக்க நடவடிக்கைகளை 'அதிக தொழில்நுட்ப வாசகங்களைப் பயன்படுத்தாமல், எளிய மொழியில்' பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மொபைல் அடிப்படையிலான விரிவாக்க  சேவைகளை ஆராய்ந்து, 'அனைத்து சேவைகளுக்கும், தேவைக்கேற்ப, எந்த குழப்பமும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வுகளை' வழங்கவும் அவர் பரிந்துரைத்தார்.

இந்திய விவசாயத்தின் பல்வேறு சவால்களான நீர் கிடைப்பதை குறைத்தல், பருவநிலை மாற்றம், மண் சீரழிவு, பல்லுயிர் இழப்பு, புதிய பூச்சிகள் மற்றும் நோய்கள், பண்ணைகள் துண்டு துண்டாக மாறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை குடியரசு துணைத் தலைவர் விளக்கினார்.

இந்த சவால்களைச் சமாளிக்க, ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வெளிக்கொண்டு வரவும், அளவிடக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கவும் அவர் ஐசிஏஆர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை விவசாயத்தில் திறமையான மனிதவளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நாயுடு, பயிற்சி பெற்ற விவசாய-வணிக பட்டதாரிகள் விவசாயத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதற்கும் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...