தமிழ்நாடு பாரதிய.ஜனதா கட்சியில் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்களுடன் மாவட்டப் பார்வையாளர்கள் நியமனம்
தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வௌியிட்டுள்ள அறிக்கையில் :-
சட்டமன்றக் குழுத் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன். நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், கரு.நாகராஜன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பி.கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட 11 மாநில துணைத் தலைவர்களும்..
எம்.முருகானந்தம், ராம.ஸ்ரீனிவாசன், பொன்.வி.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி உள்ளிட்ட 5 மாநில பொதுச்செயலாளர்களும்.
முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், டி.மலர்க்கொடி, எஸ்.மீனாட்சி, வினோஜ் பி.செல்வம், எஸ்.சரவணகுமார், எம்.மீனாதேவ், ஏ.அஸ்வத்தாமன், ஆர்.அனந்தபிரியா, பிரமிளா சம்பத், எஸ்.சதீஷ்குமார், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 13 மாநிலச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஆர்.சேகர் மாநிலப் பொருளாளராகவும், எம்.சிவசுப்பிரமணியன் மாநில இணை பொருளாளராகவும் மற்றும். மகளிர் அணி தலைவியாக ஆர்.உமாரதி, இளைஞர் அணி தலைவராக எம்.ரமேஷ் சிவா,
விவசாய அணி தலைவராக ஜி.கே.நாகராஜ், ஆதிதிராவிடர். அணி தலைவராக தடா பெரியசாமி, பழங்குடி. அணி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சிவபிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவியாக டெய்சி சரண், மிகவும் பிற்படுத்தப்பட்ட. அணி தலைவராக எஸ்.சாய்சுரேஷ் நியமனம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன் எஸ்.ஆதவன் ஆகிய மூவரும் மாநில செய்தித்தொடர்பாளர் கள்.
மேலும்
மீனவர் பிரிவு தலைவராக நீலாங்கரை எம்.சி.முனுசாமி, நெசவாளர் பிரிவு தலைவராக கே.எஸ்.பாலமுருகன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு தலைவராக பெப்சி ஜி.சிவக்குமார், கல்வியாளர் பிரிவு தலைவராக தங்க கணேசன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு தலைவராக கர்னல் ராமன், அரசு தொடர்பு பிரிவு தலைவராக எம்.பாஸ்கரன், சமூக ஊடகப்பிரிவு தலைவராக சி.டி.ஆர்.நிர்மல்குமார், பிரசாரப் பிரிவு தலைவராக குமரி கிருஷ்ணன், வழக்குரைஞர் பிரிவு தலைவராக வி.வணங்காமுடி,
அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவராக ஜி.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான பிரிவு தலைவராக ஜே.லோகநாதன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக அமர்பிரசாத் ரெட்டி, தரவுத்தள மேலாண்மை பிரிவு தலைவராக பி.மகேஷ்குமார், ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவராக எம்.நாச்சியப்பன்,
ஊடகப்பிரிவு தலைவராக பி.ரெங்கநாயக்கலு, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்நலன் பிரிவு தலைவராக ஆதித்தியா, கூட்டுறவுப் பிரிவு தலைவராக கே.மாணிக்கம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவராக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி,
வர்த்தகப் பிரிவு தலைவராக ஏ.என்.ராஜகண்ணன், மருத்துவப் பிரிவு தலைவராக பிரேம்குமார், தொழில்துறை பிரிவு தலைவராக பி.கோவர்த்தனன், பிறமொழிப் பிரிவு தலைவராக கே.பி.ஜெயக்குமார், விருந்தோம்பல் பிரிவு தலைவர்களாக ராத்மா சங்கர், பி.கந்தவேல் ஆகியோர் நியமனம்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக சிவகாமி பரமசிவம், எம்.என்.ராஜா, பி.ரமேஷ், கே.சர்வோத்தமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். சி.நரசிம்மன், மோகன்ராஜுலு, ஜி.கே.எஸ்.செல்வக்குமார், .அம்பேத்ராஜன், கட்டளை ஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பொன்.விஜயராகவன் உள்பட 39 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கராத்தே தியாகராஜன், எம்.என்.ராஜா, கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்பட 60 மாவட்டப் பார்வையாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட தலைவராக எம்.மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினராக சென்னை சிவா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் .
கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளார். தற்போது பெப்சி சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் எதிர்பார்த்தபடியே கட்சி நிர்வாகிகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல் கட்டமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மாவட்டப் பார்வையாளர்கள், துணை தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்