தமிழ்நாட்டில் 37 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணி மாறுதல். சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகாவும் ; போக்குவரத்துத் துறை ஆணையராக நிர்மல் குமாரும் ; ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமதுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தென்காசி, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவுத் துறைச் செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நெடுஞ்சாலைத்துறை செயலாளரான தீரஜ்குமார், வணிகவரித்துறை ஆணையராகவும் . திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக சாந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவரான திவ்யதர்ஷிணி, மகளிர் மேம்பாட்டு நல ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.உள்துறைச் செயலாளராக பணீந்தர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த சிவராசு வணிக வரித்துறை கோவை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய சுகாதார திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையராக எஸ்.கே.பிரபாகரனும்; வரலாற்று ஆய்வுத் துறை ஆணையராக ஜி.பிரகாஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கீதாவும்; தமிழ்நாட்டுப் பாடநூல் மேலாண்மை இயக்குநராக கஜலட்சுமியும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிப்காட் மேலாண்மை இயக்குநராக சுந்தரவல்லியும். சிட்கோ மேலாண்மை இயக்குநராக ஆனந்தும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தாட்கோ- நிறுவன மேலாண் இயக்குநராக ஜெயஶ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மின் ஆளுமை துறை இயக்குநராக பிரவீன் நாயர், பள்ளிக் கல்வித்துறை இணைச் செயலாளராகவும் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை கூடுதல் செயலராக மரியம் பல்லவி பல்தேவ், போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலராக டி.என்.வெங்கடேஷும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக பிரதீப் குமார்
நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சங்கர் லால், குடிமை பொருள் வழங்கல் நிறுவன இணை மேலாண்மை இயக்குநராக கற்பகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கருத்துகள்