உத்தரப்பிரதேசத்தின் ஹாபூரில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹாபூரில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து, மனதை உலுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் சாத்தியமான பிற அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது“ என்று குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள்