நித்தி ஆயோக்‘கோவிட்-19 தணிப்பு மற்றும் மேலாண்மை : இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் ஆயுஷ் சிகிச்சையின் தொகுப்பு‘
கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மையில், நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் ஆயுஷ் அடிப்படையிலான சிகிச்சை பற்றிய தகவல்களின் தொகுப்பை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது.
நித்தி ஆயோக் துணைத்தலைவர் திரு.சுமான் பெரிமற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் கலுபாய் ஆகியோர், இந்தத் தொகுப்பை வெளியிட்டனர். நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் நித்தி ஆயோக் மற்றும் ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நித்தி ஆயோக் துணைத்தலைவர் திரு.சுமன் பெரி வெளியிட்டுள்ள செய்தியில், “கோவிட்-19 தொற்று பரவிய சோதனையான காலகட்டத்தில், தேசிய மற்றும் மாநில அளவில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகள் எத்தகைய பலனைக் கொடுத்தது என்பது பற்றி, நாம் கற்றுக்கொண்டதை அனைவருக்கும் தெரிவிப்பது சிரமமான ஒன்று. ஆனால், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை எந்தளவு வலுப்படுத்தியது என்பது பற்றிய தகவல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணம், பாரம்பரிய மருத்துவ கட்டமைப்பைக் கொண்டுள்ள பிற நாடுகளுக்கு, முக்கிய அறிவாற்றலின் ஆதாரமாகத் திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது, கோவிட்-19 மட்டுமின்றி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பிறவகை தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு உதவிகரமாக இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் கலுபாய், “இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதில், தற்கால மருத்துவ முறைகளுடன், ஆயுஷ் மருத்துவ முறைகளும் முக்கியப் பங்கு வகித்தன. பாரம்பரிய மற்றும் வழக்கமான சுகாதார சிகிச்சை முறைகளின் கூட்டு முயற்சிகள், முழுமையான சுகாதாரசேவை மாதிரியை வழங்குவதில் உலகிற்கு வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 197.84 கோடியைக் கடந்தது
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 197.84 கோடிக்கும் அதிகமான (1,97,84,80,015) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,57,98,020 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.68 கோடிக்கும் அதிகமான (3,68,29,621) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது..
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (1,09,568) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.25 சதவீதமாக உள்ளனர்.
இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.54 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,684 பேர். குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,51,590.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,092 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,12,570 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 86.32 கோடி (86,32,90,209). வாராந்திரத் தொற்று 3.56 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.14 சதவீதமாக பதிவாகியுள்ளது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைச் செய்திகள
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 197.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,09,568 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.25 சதவிதமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.54 சதவீதம்
கடந்த 24 மணி நேரத்தில் 14,684 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17,092 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 4.14 சதவீதம் ஆகும்
வாராந்திர பாதிப்பு விகிதம் 3.56 சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 86.32 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,12,570 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்