முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரங்கு அம்மை நோய் மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறை

குரங்கு அம்மை நோய் மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறை

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பது வருமாறு:-


உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 ஜனவரி 2022 முதல் 22ஜூன் 2022 வரை, ஆய்வக பரிசோதனைகளுக்கு பிறகு, 50 நாடுகளைச் சேர்ந்த 3413 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளையும் (86%) அமெரிக்காவையும் (11%) சேர்ந்தவர்களாவர். இது உலக அளவில் மெதுவாக, அதேவேளையில், நிலையாக தொற்று பரவி வருவதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நோய் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வருவது, இந்தியாவிலும் தேவையான ஆயத்த நிலையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

எனவே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கீழ்க்காணும் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்:

அ) மாநில எல்லைப்பகுதி நுழைவிடங்களில் உள்ள சுகாதார கண்காணிப்புக் குழுக்கள், , நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மருத்துவர்கள், மாறுபட்ட நோய் கண்டறிதல், நோய் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுபவர்கள்/ பாதிப்பு வாய்ப்பிருப்பவர்கள்/ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரக்கும் பயிற்சி மற்றும்  மறுபயிற்சி அளிப்பதுடன், பாதிப்பு கண்டறியப்பட்டால், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆ) மாநில நுழைவு இடங்களில் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும்  அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும்.

இ) நோயாளிகளை தனிமைப்படுத்துதல், அல்சர் பாதிப்பிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அதுதொடர்பான சிகிச்சை அளிப்பதுடன், தொடர்ந்து கண்காணித்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தடுக்க வேண்டும்.

ஈ) குறிப்பிட்ட சில சுகாதார மையங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு பற்றிய தகவலை முறையாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

உ) குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர்/ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளை தேர்வு செய்து, அங்கு போதுமான மனித வளம் மற்றும் மருத்துவ சாதன கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

இது தவிர, ஸ்புட்னிக் வி (Sputnik v) தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், முன்னெச்சரிக்கை தவணையை  (பூஸ்டர் டோஸ்) சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்              குரங்கு அம்மை வைரஸால் ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய் . குரங்கு அம்மை வைரஸ் Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகளில் முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டதில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் இது வரை கேமரூன் நாட்டில் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது 

குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும்  பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி, தரமற்ற மருத்துவச் சேவையைப் பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறக்கும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில வாரங்களில் குணமடைந்துவிட முடியும் என ஆராய்ச்சி உணர்த்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...