ஆவினில் ஊழல்கள் சேலத்தில் ஆவின் பால் பண்ணையைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி. சா.மு.நாசர்
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1.5 டன் இனிப்புகளை தனது சொந்த பயன்பாட்டுக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்ற நிலையில்
பொது மக்கள் மத்தியில் இதற்கு இவ்வளவு காலம் தாமதம் ஏன் என்ற வினா உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் அலுவலக அலுவலர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு 2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும் தீபாவளி பரிசு வழங்க லெதர் பேக் வாங்கிய வகையில் சுமார் 49லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாகக் கணக்கு காட்டியிருப்பது அந்த ஆண்டு தணிக்கைத்துறையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு தேவையற்ற செலவினங்களைச் செய்து ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது ஆவின் தணிக்கைத்துறையின் 1000 க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாக இருப்பதால் அதனை பெற்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆவினில் பல ஊழல்கள் வெளி வரும் என்பதை உணரமுடிகிறது
கருத்துகள்