முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறவே அதற்கு தடை விதிக்க் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்குக்கு  நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது 2019, முதல் 2021 ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோயமுத்தூர் மாவட்டங்களின் நெடுஞ்சாலையில் டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கம் ஜூலை மாதம் 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது 

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் உள்ளது.





அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.   அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த செட்டிங் டெண்டர் ஊழல்களை விசாரித்து அதில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில்  14 பக்கம் புகார் மனுவும் மற்றும் 78 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் சார்பில் சமர்ப்பித்தது. 






திமுக அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேல் இந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது போல இனியும் மவுனமாக இல்லாமல் மக்களுக்கு நீதிமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் விளக்கம் அளிப்பாரா? அவர் இது வரை அமைதியாக இருக்க என்ன காரணம் என்று தைரியமாகச் சொல்வாரா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பேன் என்று கோஷமிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அதிமுக அரசின் முதல்வர் நடத்திய ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்றும் அறப்போர் இயக்கம் வினா எழுப்புகிறது. தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறையில் செய்யப்பட்ட டெண்டர் செட்டிங் புகாரில் அன்று அங்கு கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய பழனி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 





அடுத்த கட்டமாக அவர் மீது FIR போடப்பட்டு கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த 692 கோடி செட்டிங் புகாரில் அன்றைய முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பங்கு என்ன என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே அந்த டெண்டர் யாருக்கு கொடுக்கப்பட இருக்கிறது என்று அறப்போர் இயக்கம் வெளியிட்டு புகார் அளித்து வந்ததால் பழைய டெண்டரை ரத்து செய்யாமல் ரகசியமாக புதிய டெண்டர் போட்டு அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு செட்டிங் செய்துள்ளார்கள் என ஒரு தனியார் தொலைக்காட்சி செய்திகள் தருகிறது இரண்டு முறை ரத்து செய்யப்பட்டு மூன்றாவது முறையாகவும் முடிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பொறுப்பாளரான பழனி. 

டெண்டர் விவகாரம் எல்லாம் அதிகாரிகள் தான் பார்த்துக்கொள்ளுகிறார்கள் என்று சொல்லிய முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி  இந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? நெடுஞ்சாலைத்துறைக்கு செயலாளர் என்று ஒரு IAS அதிகாரி தற்போது இருக்கிறாரே அவர் இந்தப் பழனி மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?

டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தை மிச்சப்படுத்தாமல் அதிக விலைக்கு முடிவு செய்யத் துணை போகும் அதிகாரிகளை உடனுக்குடன் தண்டித்தால் தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு துணை செல்லப் பயப்படுவார்கள். அந்த பயத்தை அந்த அதிகாரிகளுக்கு விரைவில் ஏற்படுத்த அறப்போர் இயக்கம் போன்ற அமைப்பு முயற்சி செய்கிறது. 

ஆனால் ஊழலை ஒழிப்பதாகச் சொல்லி ஊழல் எதிர்ப்பை முற்றிலும் ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும். 

பி எம் கேர்ஸ் மூலம் நாட்டு மக்களிடம் நன்கொடை வாங்கி அந்தக் கணக்கை யாரிடமும் சொல்ல முடியாது என்று சொல்லி, வெளிப்படைத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தார். 

ஒரு அரசு துறையில் ஊழல் நடந்ததாக புகார் வந்தால் அந்தப் புகாருக்கு உள்ளான அரசு ஊழியரை விசாரிக்க அந்த துறையின் மேல் அதிகாரியின் எழுத்துபூர்வமான அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். தன்னுடைய துறையில் ஊழல் நடந்தது என்று எந்த உயர் அதிகாரி விசாரணை நடத்த அனுமதி கொடுக்கப் போகிறார்? அல்லது அவரே பங்கு வாங்கியிருந்தால் அந்த அதிகாரி எப்படி அனுமதி தருவார்.அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட செய்தி தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேனுக்கு எதிரான மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது இடைக்கால தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிசாமி வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 11-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...