உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முதன்முறையாக நேரலையில் ஒளிபரப்பாகிறது
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை பொது மக்கள் அறிந்து கொள்ளும் படி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கும் படி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்த பின்னர் இறுதி விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
"தேசிய மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். அதை தெரிந்து கொள்வதற்கு பொது மக்களுக்கு உரிமையுள்ளது, இதற்காகப், பொதுமக்களின் உரிமைகள், மற்றும் வழக்குத் தொடர்ந்தோரின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் தேவையான விதிமுறைகள் வகுக்கப்படும். நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது உதவியாக இருக்கும். வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது முதலில் உச்சநீதிமன்றத்திலிருந்து துவங்குமென அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்