இயக்குனர் இமயம்
எனப் புகழப்பெற்ற தேனி அல்லிநகரம் பாரதிராஜா, தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளவர், உணர்வு நிறைந்த பதினாறு வயதினிலே, வேதம் புதிது, முதல் மரியாதை என நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர் 81 வயதாகும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர் தற்போது சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சையின் காரணமாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது
இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் குறித்த விபரம் வெளியானதை தொடர்ந்து அவர் உடல்நிலை நல்ல நிலையில் சீராக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று இரசிகர்கள் ஆலயத்தில் வேண்டுதல்
கருத்துகள்