சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா நிகழ்வின் போது தமிழ்நாட்டின் அறியப்படாத விடுதலைப்போராட்ட வீரர்களை பிரபலப்படுத்துவதற்கான பிரச்சாரத்தை பிஐபி மேற்கொள்ளவிருக்கிறது
சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நாடு பயணிக்கும் நிலையில் மத்திய அரசின் தகவல் தொடர்பு பிரிவான தமிழ்நாடு பத்திரிகை தகவல் அலுவலகம், தமிழ்நாட்டின் அறியப்படாத விடுதலைப்போராட்ட வீரர்களை பிரபலப்படுத்த சமூக ஊடக பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த முக்கியமான நிகழ்வின் போது பிரபலப்படுத்துவதற்காக மத்திய அரசால் நூற்றுக்கும் அதிகமான விடுதலைப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டுள்ளது.
அறியப்படாத விடுதலைப்போராட்ட வீரர்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சமூக ஊடக குழு அதன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் தொடர்ச்சியாக பிரபலப்படுத்தும் தகவல்களை பதிவிட்டு வருகிறது.
சமூக ஊடக தளங்களில் ஹாஷ்டேக் உடன் @pibchennai பிஐபி தமிழ்நாடு என்பதை டேக் (Tag) செய்து காட்சிப்பதிவு, அனிமேஷன், ஒலிப்பதிவு போன்றவற்றை பன்முக ஊடகங்களில் பதிவு செய்து பங்கேற்க பொதுமக்களுக்கு பிஐபி அழைப்பு விடுக்கிறது. இதற்கான மையப்பொருட்கள் :
சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் அல்லது ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள்
சமூக ஊடக பதிவுகளில் சிறந்தவற்றுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தப் பதிவுகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரரின் கதையாக இருக்கலாம். விடுதலைப் போராட்ட வீரரின் நினைவிடம் குறித்த தகவலாகவும் இருக்கலாம். அல்லது விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கிய இடங்களாகவும் இருக்கலாம்.
இந்தப் பிரச்சார இயக்கம் சுதந்திர தினத்திற்கு 10 நாள் முன்பாக தொடங்கவிருக்கிறது.
கருத்துகள்