திமுகவின் மூன்னோடி தலைவரான துணை பொதுச் செயலாளராகவும் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிருந்து விலகினார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009 ஆம் ஆண்டில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வதென்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின் படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று பதவியில் இருந்தும், கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். சுப்புலட்சுமியின் கணவரான ஜெகதீசன் கட்சி குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. சுப்புலட்சுமியும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலிருந்து வந்த நிலையில் நேற்று துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவர் விலகிய நிலையில், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சரஸ்வதியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்றால் முக்கிய பதவியில் அமர்த்தப்படுவாரென அப்போது திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்ட. நிலையில் தற்போது கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.
திமுகவின் மூன்னோடி தலைவரான துணை பொதுச் செயலாளராகவும் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிருந்து விலகினார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009 ஆம் ஆண்டில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வதென்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின் படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று பதவியில் இருந்தும், கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுப்புலட்சுமியின் கணவரான ஜெகதீசன் கட்சி குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. சுப்புலட்சுமியும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலிருந்து வந்த நிலையில் நேற்று துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவர் விலகிய நிலையில், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சரஸ்வதியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்றால் முக்கிய பதவியில் அமர்த்தப்படுவாரென அப்போது திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்ட. நிலையில் தற்போது கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.

கருத்துகள்