கோயமுத்தூர் உக்கடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில், கோட்டை ஈஸ்வரன் கோவிலருகே காவல் சோதனை சாவடியின் முன்
ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறிய நிலையில் , வாகனம் இரண்டு துண்டாகியது. காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
அவரது பெயர் ஜமேசா முபீன் என்பது அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் எதும் இருந்ததா என்பது தெரியவில்லை எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு
தெரிவித்துள்ளார்.கோயமுத்தூர் உக்கடம் காரில் குண்டு வெடித்துள்ளது, அந்த காரை ஓட்டிய எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்தவன் எனத் தெரியவருகிறது , சி சி டிவி காட்சிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் , தனிப்படைகளும் இந்தக்கோணத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் ,
கருத்துகள்