பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சாலையோர வியாபாரிகளை இணைக்க நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் தகவல்
மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு. கௌஷல் கிஷோர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் , பயனாளிகள் விவரங்கள், ஒதுக்கப்ட்டுள்ள நிதி, நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார் .
மேலும், திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்த மத்திய இணை அமைச்சர், அவர்களது வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி , பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் , பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் போன்ற ஏழைமக்கள் இந்த திட்டத்தில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
கருத்துகள்