எழுத்தாளர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கதையை மையப்படுத்தி
லைகா புரொடக்ஷன்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற அதே பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது.முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய சாதனையை படைத்தது.
இந்த நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும்,அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.
மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மணிரத்னம் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்து.
காலம்சென்ற கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை ராயலாடியாகவோ அல்லது நன்கொடையாகவோ வழங்கினர்.
இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ஒரு கோடி ரூபாயை மூலதன நிதியாக வழங்கினார்கள்.
கருத்துகள்