தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் இரண்டு உறுப்பினா்களாக.ஓய்வு உயா்நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ, வழக்குரைஞா் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமிக்க பரிந்துரை
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் இரண்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு.
அதன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செவ்வாயன்று நடந்ததில். அரசின் செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு இரண்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழுக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரவைத் தலைவா் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்றாா். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ, வழக்குரைஞா் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய முடிவு செய்த பரிந்துரை ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவா் பரிந்துரைகளை ஏற்று, உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பாா். அதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா்களாக இருவரும் பதவியேற்றுக் கொள்வா்.
மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் கூட்டத்துக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நடந்து முடிந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்களில் தலைவா்கள், உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான கூட்டங்களில் அப்போது எதிா்க்கட்சியான திமுக அதில் பங்கேற்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..
கருத்துகள்