சென்னை விமான நிலையத்தில் ரூ.78.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
ஏர் இந்தியா விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்த விமானத்தில் 10.03.2023 அன்று சோதனை நடத்தினர். இருக்கைக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பை ஒன்றில் பசை வடிவிலான தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1598 கிராம் எடை கொண்ட அந்த 24 கேரட் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.78.19 லட்சமாகும்.
சுங்கச் சட்டம் 1962ன் படி அந்தத் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை விமான நிலைய சுங்கத் துறை கூடுதல் ஆணையர் திரு. கேபி ஜெயகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்