வீடு புகுந்து திருடிய வழக்கில் நெல்லிகுப்பம் பாஜக நகர செயலாளர் கைது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் திருட்டு வழக்கில் (குற்ற எண்7/2023 பிரிவு 379 இதச) ஈடுபட்டதாக கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் பாஜக நகர செயலாளர் அறிவழகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூரில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய வழக்குகளில் சிசிடிவி அடிப்படையில் புலன் விசாரணை மேற்கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்..
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் பாஜக நகர செயலாளராக உள்ளார்.
கருத்துகள்