ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா
நடைபெறுவதில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது அதை முன்னிட்டு பாராட்டு விழா நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்யன் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன், எம்.ஜி.ஆர் திரைப்பட நகரத்தின் தலைவரும் நடிகருமான ராஜேஷ், பூச்சி முருகன், இந்தோ ரஷ்யா மையத்தின் வெளியுறவு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, மாமனிதன் படம் வெளியானதற்குப் பிறகும் இவ்வளவு நாட்கள் கழித்து மிகவும் ஆழமாக படத்தைப் பார்த்து தொடர்ந்து பேசி வருவதற்கு மிக்க நன்றி எனத் தெரிவித்தார்.
அங்கு பேசிய நடிகர் ராஜேஷ், மாமனிதன் படத்தை எனது வீட்டில் மடிக்கணினியில் பார்க்கும் போதே ஐந்து முறை அழுதேன். திரைப்படம் மூலம் கருத்துக்களைச் சொல்லும் போது அது மக்களிடம் நேரடியாக சென்று சேரும். காந்தியின் சத்யாகிரகம் மற்றும் இயேசுநாதரின் போதனைக்கு மேலுள்ளது மாமனிதன் திரைப்படமென்றார் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் இணைந்து இன்னும் பல படங்கள் பண்ண வேண்டும் எனக் கோரிக்கை வைத்த ராஜேஷ் ஒப்பற்ற சோவியத்திற்கு செல்லும் மாமனிதனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்