ஜூன் மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு புதிய இரயில் இயக்கப்படும்.
ஜூன் மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு 20602 போடிநாயக்கனூர் - சென்னை சென்ட்ரல் ரயில் தொடங்கி வைக்கப்படும்.
20602 போடிநாயக்கனூர் - சென்னை ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும், 20601 சென்னை - போடிநாயக்கனூர் ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயங்கும்.
போடிநாயக்கனூ - சென்னை இடையே செல்லும் இந்த ரயில் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.
20601 சென்னை - போடிநாயக்கனூர் ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடிநாயக்கனூரைச் சென்றடையும்.
20602 போடிநாயக்கனூர் - சென்னை ரயில் போடிநாயக்கனூரில் இரவு 08.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
15.06.23 இரவு 8.45 மணிக்கு போடிநாயக்கனூர் - மதுரை ரயில் தொடங்கி வைக்கப்படும்.
போடிநாயக்கனூர் - மதுரை தினமும் மாலை 05.50 க்கு போடியில் புறப்பட்டு 07.50 க்கு மதுரை சென்றடையும்.
மதுரை - போடிநாயக்கனூர் தினசரி ரயில் காலை 08.20 க்கு மதுரையில் புறப்பட்டு 10:30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.
கருத்துகள்