முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் அறிமுகம்

தமிழ்நாடு அரசு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகிறது: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை  மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் சென்னையில் நடைபெற்ற விழாவில் இன்று (22.12.2023) அறிமுகப்படுத்தினார்.


தமிழ்நாட்டில் 2024, ஜனவரி 19 முதல் 31 வரை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான  இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் சென்னையில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீரமங்கை என பெயரிடப்பட்ட சின்னத்தையும் அமைச்சர்  அறிமுகப்படுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 36 வகையான விளையாட்டுகள் இடம்பெற உள்ளன என்றும், சிலம்பம்  காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் கூறினார். இந்த போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 5630 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தலைமையின் கீழ்  இந்தியா விளையாட்டுத் துறையில்  சிறப்பாக முன்னேறி வருகிறது என்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போடடிகள் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளதை அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நமது வீரர்கள் தங்களது திறன்களை பறைசாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.



விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநிலங்களின் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருவதாக அவர் கூறினார். விளையாட்டுப் போட்டிகள், மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து  அனைவரையும் ஒன்றிணைப்பதாக அவர் தெரிவித்தார்.

திறன், விடா முயற்சி, குழு மனப்பான்மை ஆகியவையே வெற்றிக்கு வித்திடும் என்றும், இதுவே வாழ்க்கைக்கான பாடம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடாக உள்ளது என்று கூறிய அவர், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் தருவாயில், விளையாட்டிலும் முதன்மை சக்தியாக திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியாவும் பங்கேற்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக பாராட்டுத் தெரிவித்த அவர், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் சிறப்பாக நடத்தும் என்று கூறினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மாநிலம் என்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் என்றும்  அவர் தெரிவித்தார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை தமிழ்நாட்டு மக்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என்று திரு அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு ஜெ மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகள்  பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...