முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் அரசியல் களப்பணி துவங்கியது

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் அரசியல் களப்பணி துவங்கியது 

''விஜயகாந்தின் மக்கள் பணிகளை மறைக்க திமுக முயற்சிப்பதாக பிரேமலதா குற்றசயசாட்டு,   நடிகர் விஜயகாந்த் மறைந்து 15 நாட்கள் ஆகும் நிலையில் ஆளுங்கட்சி திமுகவுக்கு எதிராக அதிரடியாக அரசியலைத் துவங்கியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

ரிஷிவந்தியம் தொகுதியில் நடிகர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்து செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி. ஜனவரிமாதம் 20 ஆம் தேதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தேமுதிகவின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுமென அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்;


"கேப்டன் அவர்கள் 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஏகோபித்த ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் வேட்பாளராக நின்றபொழுது அந்த தொகுதி மக்கள் தங்களது அடிப்படை தேவைகளையும், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படியும் கேப்டன் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்கள். அப்போது வெற்றி பெற்றால் கண்டிப்பாக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியும் அளித்தார்.அதனடிப்படையில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக வளர்ச்சியடையாத அந்த ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களின் தேவைகள் அறிந்து மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலை கடைகள் என அடுக்கடுக்காக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.



அனைத்திற்கும் மகுடம் சூட்டுவதுபோல் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற அந்த பிரதான கோரிக்கையை எந்த அரசும் செய்யாத நிலையில், கேப்டன் அவர்கள் அந்த பாலத்தை அமைத்து தரவேண்டும் என்று முழுமூச்சுடன் டெல்லிவரை பாரத பிரதமரை சந்தித்து மத்திய நிதியாக ரூபாய் 22 கோடியை பெற்று வந்து அந்த உயர்மட்ட பாலத்தை அமைத்தார்.திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் வரை செல்லுகின்ற பழைய தஞ்சாவூரான் சாலை என புகழ்பெற்ற அந்த சாலையில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மக்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தே தடைபட்டு போகும் அவலநிலை இருந்தது. அந்த அவலநிலையை போக்கியவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் என்பதை கள்ளக்குறிச்சி மாவட்டமே அறியும். அதேபோன்று ரிஷிவந்தியம் தொகுதியில் முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துகளில் ஏற நிற்பதற்கு இடமில்லை என கேப்டன் அவர்களிடம் மக்கள் கேட்ட காரணத்தினால் கேப்டன் அவர்கள் பல பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகளை அமைத்தார்.



அப்படி அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகளில் மணலூர்பேட்டை மற்றும் மாடாம்பூண்டி கூட்டு ரோடும் அடங்கும். சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாடாம்பூண்டி கூட்ரோட்டில் ரௌண்டானா அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கிருந்த நிழற்குடையை அகற்ற முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் அதைத் தடுத்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்தவர்களிடம் மீண்டும் அருகாமையில் நிழற்குடையை கண்டிப்பாக அமைத்து தருகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் இன்றுவரை அதை அமைத்துதரவில்லை.இந்தநிலையில் மணலூர்பேட்டையில் கேப்டன் அவர்கள் அமைத்திருந்த பயணியர் நிழற்குடையையும் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதை எடுக்க முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் திரண்டு அதை தடுத்துநிறுத்தினர். அப்போதும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கீழே கால்வாய் அமைக்கப்பட்டு அதன்மேலே கான்கிரிட் போட்டு மூடிவிட்டு அதேஇடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிச்சயமாக அமைத்துதருகிறோம் என உறுதியளித்தனர். கால்வாய் வேலை முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் திமுகவினரின் தூண்டுதலால் இதுவரை அந்த நிழற்குடையை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதை கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது காவல்துறையினர் தலையிட்டு தேமுதிகவினரிடம் பேசி கண்டிப்பாக அங்கே நிழற்குடை அமைக்க அதிகாரிகளிடம் பேசுகிறோம் என காவல்துறையினர் சமாதனம் செய்தனர்.ஆனாலும் இன்றுவரை பயனியர் நிழற்குடை அமைக்க எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.


இதை பார்க்கின்ற பொழுது தலைவர் கேப்டன் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த வியக்கத்தக்க மக்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாக, அவருடைய அந்த பணிகளை அழிக்கும் விதமாக அங்கு இருக்கின்ற திமுகவினரின் தூண்டுதலால் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக மக்களே குற்றம்சாட்டுகிறார்கள். முதலில் மாடாம்பூண்டி கூட்ரோடு அடுத்தது மணலூர்பேட்டை என கேப்டன் அவர்களின் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அங்குள்ள திமுக வினரையும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கின்றேன். மேலும் இதை கண்டித்து வருகின்ற 20.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்".     என அதில்  கூறியுள்ளார்  தற்போது பிரதமர் சார்பில் இரங்கல்


மற்றும் ஆறுதல் கலந்த தேறுதல் கடிதம் வந்த நிலையில் அவரது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது, விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துக் கூடிய கூட்டம் எல்லாம் அவர் கட்சியினர் மட்டுமே அல்ல அது அவர் மீது அன்பு வைத்த பொதுமக்கள் ஆனால் தற்போது அதை அரசியல் ஆதாயமாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது குடும்பம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்தில்


உண்மை உள்ளது போலத்  தெரிகிறது ,இதில் நமது பொதுநீதி யாதெனில் முன்பெல்லாம்  1990 க்கு முன்பிறந்த நபர்கள் அறிந்த வகையில் கிராமத்தில் ஒப்பாரிப் பெண்கள் பாட்டில் வரும் சில ஒய்யார வரிகள் அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ! இந்த பிரேமா.....விஜயகாந்த்துக்கு ஏனொ கச்சிதமாகப் பொருந்துதே..சாமி!

"நாளுக் கழியலையே 

நாதா நீர் கூடலையே..

தாலி கொண்டு வந்த

தட்டானும் போகலையே..

பனியாரம் சுட்ட சட்டி

பாதி மணம் போகலையே,

கல்யாணப் பானைகூட 

கழுவிக் கவுக்கலையே 

பந்தல் பிரிக்கலையே

வந்த ஜனம் போகலையே",.    அடியாத்தி ...நம் கண்களுக்கு மட்டுமே .அந்தக் கள்ளக்குறிச்சி தெரியுதா இல்லை எல்லோருக்குமா ?  மொத்தத்தில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், '.இதுவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...