பாண்டியப் பேரரசி மதுரை அன்னை மீனாட்சிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம்,
மதுரை சித்திரை திருவிழா 2024 க்கு அட்டவணை வெளியீடு - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2024 அட்டவணையை வெளியிட்டது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோவில் நிர்வாகம்.
மதுரையின் பல நூற்றாண்டு அடையாளம், நகரின் மையத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்த மினாட்சியம்மன் திருக்கோவில். ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் திகழ்கிறது. இதில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலக புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது.
ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி நிறைவடைகிறது.
ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றம், 19 ஆம் தேதி பட்டாபிஷேகம், 20ஆம் தேதி மீனாட்சியம்மன் திக் விஜயம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி திருத்தேரோட்டம் , கள்ளழகர் எதிர்சேவை, 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
கருத்துகள்