முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன


மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (20.05.2024) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.


வாக்குப்பதிவு சுமுகமாகவும் பாதுகாப்பான சூழலிலும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குச் சாவடிகளில் போதுமான நிழல், குடிநீர் வசதிகள், சாய்வுதள வசதிகள், கழிப்பறைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வெப்பமான வானிலை உள்ள பகுதிகளில் வெப்பத்தை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து, பொறுப்புடனும் பெருமையுடனும் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை நடைபெற்ற 4 கட்ட வாக்குப் பதிவில் சராசரியாக சுமார் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 45 கோடியே 10 லட்சம் மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.

பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவே காணப்பட்டது. தற்போது மும்பை, தானே, லக்னோ போன்ற நகரங்கள் இந்த 5-ம் கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த நகரங்களின் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பாக கேட்டுக்கொண்டுள்ளது.

5ம் கட்ட தேர்தல் தொடர்பான சில முக்கிய தகவல்கள்:

2024 பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 2024 மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த 5-ம் கட்டத்தில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு (பொது தொகுதி-39; எஸ்டி தனி தொகுதி-03; எஸ்சி தனி தொகுதி -07) தேர்தல் நடைபெறுகிறது

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை (20.05.2024) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. சில தொகுதிகளில் மட்டும் நேரம் மாறுபடும்.

ஒடிசாவில் 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (பொது-21; எஸ்டி-08; எஸ்சி-06;) நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

5-ம் கட்ட தேர்தலுக்காக 94,732 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சுமார் 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 5-ம் கட்டத்தில் சுமார் 8.95 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 4.69 கோடி பேர் ஆண்கள்; 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5409 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்ஆவார்கள்.

7.81 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 24,792 வாக்காளர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். 7.03 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள்.

5-ம் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 153 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் பொது பார்வையாளர்கள், 30 பேர் காவல் பார்வையாளர்கள், 68 செலவின கண்ணாணிப்புப் பார்வையாளர்கள் ஆவார்கள்.

சில மாநிலங்களில் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2000 பறக்கும் படைகள், 2105 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 881 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன.

மொத்தம் 216 சர்வதேச எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும்  மாநிலங்களுக்கு இடையேயான 565 எல்லை சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

வாக்குச் சாவடிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க குடிநீர், கொட்டகை, கழிப்பறைகள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள் போன்ற குறைந்தபட்ச வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களையும், வாக்குப்பதிவு தேதி விவரங்களையும் இந்த இணையதள இணைப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம். https://electoralsearch.eci.gov.in/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...