முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு தொல்லியல் துறை புனரமைத்த திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணற்றை, தமிழ்நாடு தொல்லியல் துறை புனரமைத்து புதுப்பொலிவாக்கியது.


தமிழ்நாட்டில், 110 வரலாற்றுச் சின்னங்களை, மாநில தொல்லியல் துறை பாதுகாக்கிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி - துறையூர் சாலையிலுள்ள திருவெள்ளறை கிராமத்தில், பல்லவ மன்னர் நந்திவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில், இங்கு, 'மார்பிடுகு பெருங்கிணறு' எனும் பெயரில், ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு கட்டப்பட்டது.      கடந்த காலங்களில் ஊர் மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கியதுடன், ஒரு பக்கத்தில் குளிப்பவர்களை மறுபக்கத்தில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத  பாதுகாப்பு வசதியுடன் கட்டப்பட்ட பெருமையும் உடையது. படிக்கட்டில் தமிழில் எண்கள் இடப்பட்டுஉள்ளன.


இது, 1976 ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்தக் கிணற்றிலுள்ள கல்வெட்டின் படி, நந்தி வர்மன் ஆட்சியில், ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய நல்லுாழான் என்பவரின் தம்பி கம்பன் அரையன் என்பவர், கி.பி 799 ல் துவங்கி, 800 ல் வெட்டி முடித்துள்ளார். கிணறை, 45 லட்சம் ரூபாய் செலவில், தொல்லியல் துறை பழமை மாறாமல் செப்பனிடும் பணியை, கடந்தாண்டு துவக்கி தற்போது முடித்துள்ளது.


மேலும், கிணற்றைச் சுற்றி கம்பி வேலி, வரலாற்றுக் குறிப்பு பலகைகள், காவலர் கூடம், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்துள்ளது.

மேலும், இக்கிணற்றை சுற்றியிருந்த மண்மேடையை அகற்றி, 4 அடி ஆழத்தில் சமதளமாக்கி, புல்வெளியை அமைத்து, பார்வையாளர்கள் நடக்க, பாவு கற்களை பரப்பியுள்ளது. இரவில் ஒளிரும் விளக்குகளையும் அமைத்துள்ளது.

தற்போது, தொல்லியல் களங்களை அறியும் ஆர்வம் மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஸ்வஸ்திக் கிணறு, புனரமைக்கப்பட்ட பின், சுற்றுலா பயணியரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.திருவெள்ளறை வைணவ 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு நான்காவது திருத்தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்தது. இங்கு செந்தாமரைக்கணன் எனும் புண்டரீகாக்ஷன்  எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த மொத்தம் 24 பாசுரங்கள் உள்ளது.

திருவெள்ளறை அழகன் பெரியாழ்வார் பாசுரம் 192 

இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார், சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய், அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய் ....பெரியாழ்வார், 192 வது பாசுரம்,                                    இக்கோவில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் கி.பி 805 ஆம் ஆண்டு துவங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், மற்றும் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் திருப்பணி நடைபெற்றுள்ளதை அக் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். மதுராந்தக உத்தமச் சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இக் கோவில் "பெரிய  ஸ்ரீ  கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கி.பி 1216 ஆம் ஆண்டு பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் பொன்னமராவதி யுத்தம் மூன்றாம் இராசராசனை வென்றதன் மூலம் காவேரி நாட்டை எப்படித் தனதாக்கிக் கொண்டான் என்பதை விளக்கும் பாடல் ,

வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவேரி நாட்டிலரமியத்துப்

பறியாத தூணிலை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றானே!

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டைக் கைப்பற்றிய போது அங்கிருந்த எல்லா மண்டபங்களையும் இடித்துத் தள்ளினான் ஆனால் அக்காவேரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது 16 தூண்களை உடைய மண்டபத்தை ஏனென்றால் அந்த மண்டபம் சோழ மன்னன் கரிகாலனை பாடியமைக்காக பட்டினப்பாலை பாடிய உருத்திரக்கண்ணருக்கு பரிசாக அளித்தது என்று விளக்குகிறது மேற்கொண்ட கல்வெட்டு பாடல்.

கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் நந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில்  "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது,

ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

பண்டெய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்! என்பதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...