தேர்தல் ஆணையம். ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல்
பின்வரும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது
01.பீகார் மாநிலம் ரூபாலி தொகுதி திருமதி பிமா பாரதி ராஜினாமா
02. மேற்கு வங்காளம் மாநிலம் ராய்கஞ்ச் தொகுதி திரு கிருஷ்ணா கல்யாணி ராஜினாமா
03.ரனாகத் தெற்கு (தனி) தொகுதி டாக்டர் முகத் மணி அதிகாரி ராஜினாமா
04. பக்டா (தனி) தொகுதி. திரு பிஸ்வஜித் தாஸ் ராஜினாமா
05. மாணிக் தலா தொகுதி திரு சதன் பாண்டே மறைவு
06.தமிழ்நாடு விக்கிரவாண்டி தொகுதி திரு என் புகழேந்தி மறைவு
07.மத்தியப்பிரதேசம் அமர்வாரா (எஸ்டி) தொகுதி திரு கம்லேஷ் பிரதாப் ஷா ராஜினாமா
08. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதி திரு ராஜேந்திர சிங் பண்டாரி ராஜினாமா
09 கர்நாடகா மாநிலம் மங்களூர் தொகுதி திரு சர்வத கரீம் அன்சாரி மறைவு
10 பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு (தனி) தொகுதி திரு ஷீத்தல் அன்குரல் ராஜினாமா
11 ஹிமாச்சலப்பிரதேசம் தெஹ்ரா திரு ஹோஷ்யார் சிங் ராஜினாமா
12 ஹமீர்பூர் தொகுதி திரு ஆஷிஷ் சர்மா ராஜினாமா
13 நலகார் தொகுதி திரு கே எல் தாக்கூர் ராஜினாமா
தேர்தல் அட்டவணை அறிவிக்கை வெளியீடு- வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம் 14.06.2024 (வெள்ளி)
வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள். 21.06.2024 (வெள்ளி)
மனுக்கள் பரிசீலனை 24.06.2024 (திங்கள்)
மனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் 26.06.2024 (புதன்)
வாக்குப்பதிவு நாள் 10.07.2024 (புதன்)
வாக்கு எண்ணிக்கை 13.07.2024 (சனி)
தேர்தல் நடைமுறை முடியும் நாள் 15.07.2024 (திங்கள்)
இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தலின் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களை அடையாளம் காண, வாக்காளர் அடையாள அட்டை தவிர ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 வகை அடையாள அட்டைகள் அனுமதிக்கப்படும்.
கருத்துகள்