கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்களாக தியானம் செய்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்த பின் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டுக்கு மே 30 ஆம் தேதி வருகை புரிந்து. கடல் நடுவிலுள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டார் பிரதமர் நஜீப் மோடி. இன்று மூன்றாம் நாள் தியானம் பிற்பகல் 2.30 மணி அளவில் நிறைவடைந்த பின்னர் விவேகானந்தர் மண்டப ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து வெளியே வந்த பிரதமர் நரேந்திர மோடி, தனக்காக ஒதுக்கப்பட்ட
'விவேகானந்தா’ படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்து சிலையின் பாதத்தில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். கடலுக்கு நடுவே பிரமாண்டமாக எழுந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையை வியப்பாக பார்த்து பிரதமர் மோடி.
அங்கு எழுதப்பட்டிருந்த திருக்குறளை அருகிலிருந்த அலுவலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
தொடர்ந்து, படகில் கரைக்கு வந்து, அங்கிருந்து கான்வாயில் உலங்கு வானூர்தி தளம் நோக்கிப் புறப்பட்டார் திருவனந்தபுரத்திற்கு அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். இன்று மாலை 6 மணியுடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செல்கிறார்.
கருத்துகள்