முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்


பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, 2024) ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய கடற்படையின் செயல்பாட்டு தயார்நிலையை ஆய்வு செய்ததுடன், ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் பயணித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் அலுவல் ரீதியான புதுதில்லிக்கு வெளியேயான முதல் பயணம் இதுவாகும்.


இந்தப் பயணத்தின் போது கிழக்கு கடற்படை கட்டளையின் பல்வேறு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்களின் செயல்பாடுகளை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய கடற்படையின் போர் திறன் மற்றும் தயார்நிலையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்திருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் ஆகியோர் இருந்தனர்.


கிழக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கலந்துரையாடிய திரு ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட கடற்படையாக இந்தியக் கடற்படை உள்ளது என பாராட்டு தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பரஸ்பர முன்னேற்றப் பாதையில் செல்வதாக அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியிலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவதிலும் இந்தியக் கடற்படை முக்கியப் பங்கு வகிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். மார்ச் 2024-ல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து 23 பாகிஸ்தானியர்களை விடுவித்த இந்திய கடற்படையின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை குறித்து அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை, மனிதாபிமானத்தையும், கடற்படை வீரர்களின் மதிப்புமிக்க கடமையையும் எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.  பாதிக்கப்படுபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் உதவ நமது கடற்படை முன்வருவதாக அமைச்சர் கூறினார்.

"நமது கடற்படை பாதுகாப்பான வர்த்தகத்தை உறுதி செய்வதும், இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிப்பதும் மிகவும் பெருமைக்குரியது. சுதந்திரமான கடற்பயணம், விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நமது மிகப்பெரிய நோக்கங்களாகும். அவற்றை நிறைவேற்றுவதில் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியா, அதன் அதிகரித்து வரும் சக்தியுடன், பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த உலகையும் அமைதியாகவும், வளமாகவும் மாற்ற உறுதிபூண்டுள்ளது" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தியாவின் கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடற்படையின் வலிமை அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.  தேச நலன் அரசுக்கு மிக முக்கியமானது என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், அதைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சராக தமது இரண்டாவது பதவிக்காலத்தில், கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடற்படை வலிமையை மேலும்  வலுவானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு