ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்பை ஏற்று நடத்தும் படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்பை ஏற்று நடத்த தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்புக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஆய்வு செய்தது. ப்ளூ கிராஸ் சொசைட்டியில் பராமரிக்கப்படும் நாய்கள், பூனைகளுக்கு முறையாக உணவளிக்கப்படுவதில்லை.
அங்குள்ள வளர்ப்பு விலங்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லையென அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்புக்கு தமிழ்நாடு அரசு நிலம் வழங்கியுள்ளது. எனவே அந்த அமைப்பை தமிழ்நாடு அரசின் விலங்குகள் நல வாரியமே ஏற்று நடத்த வேண்டும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் நிதி பெறும் ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்பின் நிதி விவரங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு மூலம் தணிக்கை செய்ய வேண்டும் எனவே கோரியிருந்தார்.
ப்ளூ கிராஸ் சொசைட்டி அமைப்பை ஏற்று நடத்த உத்தரவிட தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது .
வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைப் பராமரிப்புத்துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித்துறை, ப்ளூ கிராஸ் சொசைட்டி ஆகியவை நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
கருத்துகள்