பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரைட் ஹானரபிள் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் வாழ்த்து
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ரைட் ஹானரபிள் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரைட் ஹானரபிள் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-07-2024) வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:
"பிரிட்டன் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு கெய்ர் ஸ்டார்மருக்கு @Keir_Starmer மனமார்ந்த வாழ்த்துகள். பரஸ்பர வளர்ச்சியையும், செழிப்பையும் ஊக்குவித்து, அனைத்துத் துறைகளிலும் இந்தியா – பிரிட்டன் இடையே விரிவான உத்திசார் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்."ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காக அவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காகவும் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகளில் பங்களித்ததற்காகவும் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உங்களின் பதவிக்காலத்தில் பிரிட்டனின் வியக்கத்தக்க தலைமைத்துவத்திற்காகவும், இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கு உங்களின் தீவிரப் பங்களிப்புக்காகவும் உங்களுக்கு @RishiSunak நன்றி. உங்களின், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துகள்.”
பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார்.
இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமாரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இலங்கையில் வசித்த இவரது பெற்றோர், போரின் போது லண்டனுக்கு இடம்பெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், அரசியல் இளநிலை பட்டம் பெற்றார். 2020 ல் கெய்ர் ஸ்டார்மரின் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7.511 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்
கருத்துகள்